மொரீசியஸ்,இலங்கையிலும் யூபிஐ..
போண்டா கடை முதல் பெரிய பெரிய ஷோரூம்கள் வரை அனைத்து இடங்களிலும் இந்தியாவின் யூபிஐ வசதி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்த யுபிஐ வசதி பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் இலங்கை மற்றும் மொரீசியஸ் நாடுகளிலும் இயங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ரூபே கார்டுகள் இலங்கை மற்றும் மொரீசியஸ் நாடுகளுடன் இணைந்து இந்த சேவையை வழங்கி வருகின்றன. இந்தியாவில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கும் இடையே முதல் பணப்பரிவர்த்தனை யுபிஐ முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் சேவையை பிரதமர் மோடி முன்னிலையில் மொரீசியஸ் பிரதமர் மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் பார்வையிட்டனர்.
பணம் அனுப்புவதற்கான முறையை ரூபே நிறுவனம் பராமரிக்க உள்ளது. இந்தியாவில் வெற்றி கரமாக இயங்கும் யுபிஐ சேவை, இனி இலங்கை மற்றும் மொரீசியஸில் கிடைக்கும் என்பதால் 3 நாடுகளுக்குள் பயணிக்கும் பயணிகள் பணப்பரிவர்த்தனை எளிமையாக்கப்பட்டுள்ளது. மொபைல் எண்ணுடன் வங்கிக்கணக்கை முதலில் இணைக்க வேண்டும். எதிர்முனையில் இருப்போரும் வங்கிக்கணக்கு வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இணைந்துவிட்டால் எவ்வளவு பணம் எந்த நாட்டு மதிப்பில் அனுப்புவது என்பதை தெளிவுபடுத்தியபிறகு எளிதாக அனுப்ப இயலும். யுபிஐ சேவையில் செலகட் இன்டர்நேஷனல் என்பதை தேர்வு செய்துவிட்டு அப்படியே பயன்படுத்தலாம் அவ்வளவுதான் மிகவும் எளிதான முறையில் பணத்தை செலுத்த இயலும்.
இந்திய ரூபாய் மற்றும் இலங்கை பணம் மற்றும் மொரீசியஸ் நாட்டு பணம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்ற விவரம் தெரிந்துவிடும், பின்னர் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவிட்டதும் அக்கவுண்டில் இருந்து தேவையான பணம் எடுத்துக்கொள்ளப்படும் என்பதே