கூகுள் குரோம் பயன்படுத்துகிறீர்களா? அப்போ கவனிங்க!!!
தேசிய சைபர் முகமையான CERTஉச்சபட்ச எச்சரிக்கையை கூகுள் கிரோம் பயன்படுத்துவோருக்கு விடுத்துள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் சில பயன்பாட்டாளர்களுக்கு இருப்பதாகவும் அந்த முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது
பல்வேறு கட்டங்களில் மக்களின் பாதுகாப்புக்காக இந்த அமைப்பு அவ்வப்போது தீவிர எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. இந்த வகையில் புதிய கிரோம் பிரவுசரை தரவிறக்கம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்களில் புதிய வெர்ஷனை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பாதுகாப்பு குறைபாடுகள் நீக்கப்படும் என்றும் அந்த முகமை தெரிவித்துள்ளது
சிஈஆர்டி என்ற இந்த முகமை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் கட்டுப்பாடுக்குள் உள்ள முக்கியமான அமைப்பாகும். நாடு முழுவதும் உள்ள பொதுமக்களின் கணினிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை சிஈஆர்டி கொண்டுள்ளது
புதிய அறிவிப்பை அடுத்து பலதரப்பினரும் தங்கள் அப்டேட்களை செய்து வருகின்றனர். தேவையில்லாத தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் நோக்கில் இந்த புதிய அப்டேட்கள் களமிறக்கப்பட்டுள்ளன. கடந்த 30ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பலருக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.