வேதாந்தா நிறுவனம் விளக்கம்…
இந்தியாவில் பிரபலமான வேதாந்தா குழுமம் அண்மையில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து புதிய செமிகண்டெக்டர் ஆலையை குஜராத்தில் அமைக்க உள்ளதாக அறிவித்தது. இதன் காரணமாக பங்குச்சந்தைகளில் வேதாந்தா நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. ஆனால் புதிய அரைகடத்தி ஆலையை வேதாந்தா நிறுவனம் நேரடியாக நடத்தவில்லை என்றும், அதன் நிர்வாகம் மற்றும் முதலீடுகளை வோல்கான் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் கவனிப்பதாகவும் வேதாந்தா விளக்கம் அளித்துள்ளது.
இதே போல் கடந்த பிப்ரவரி மாதமும் வேதாந்தா நிறுவனம் தனது விளக்கத்தை அளித்திருந்த்து. அதிலும் வோல்கான் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் முதலீடு தொடர்பானவற்றை கவனிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டாலும், அண்மையில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், பாக்ஸ்கான் நிறுவனத்துடனான கூட்டு நிறுவனத்தில் 60 விழுக்காடு
பங்கை வேதாந்தா நிறுவனம் வைத்திருக்கும் என்றும், 40 விழுக்காடு பாக்ஸ்கான் வைத்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஒரே நிறுவனம் இருவேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் அண்மையில் மற்றொரு பேட்டியளித்துள்ளார். அதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வேதாந்தா நிறுவனம் ஐபோன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அந்த ஆலையை நிர்வகிப்பது வேதாந்தா நிறுவனமா இல்லை வேதாந்தா ரிசவ்சர்ஸ் நிறுவனமா , இல்லை யார் என்று அவர் அறிவிக்கவில்லை.