பொருளாதார குற்றவாளி என்பதா?
வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணமாக திகழ்ந்து வருபவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. தாம் வாங்கிய கடனுக்கு நிகராக இரண்டு மடங்காக 14,131 கோடி ரூபாய் சொத்துக்களை மத்திய அரசு எடுத்துக்கொண்டுள்ளபோதும், பழிச்சொல் மட்டும் தீரவில்லையே என்று அவர் ஆதங்கப்பட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு தனது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்தியாவை விட்டு வெளியேறிய விஜய் மல்லையா, பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார். 6,203 கோடி ரூபாய் கடன் வாங்கிய நிலையில் அதற்கு வட்டியாக 1,200 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பாயம் ஏற்கனவே தீர்ப்பளித்தது. இந்த நிலையில் விஜய் மல்லையாவின் சொத்துக்களில் 14,131 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையும், வங்கிகளும் தனது கடனைவிட இருமடங்கு எப்படி எடுத்துக்கொண்டன என்று தனது நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். PMLA சட்டத்தின் கீழ் விஜய் மல்லையாவின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. கருப்புப்பணத்தை மீட்கும் சட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட நிலையில், கணக்கில் வராத வெளிநாட்டு சொத்துகள்60,467 கணக்கில் கொண்டுவரப்பட்டன. பின்னர் அது 2024-25-ல் 2லட்சமாக குறைந்தது.