அலக்கற்றையை திரும்ப அளித்த வோடபோன் ஐடியா..
முன்னணி சிம்கார்டு நெட்வொர்க்குகளில் ஒன்றாக ஒரு காலத்தில் திகழ்ந்த வோடஃபோன் ஐடியா நிறுவனம், தங்களால் பயன்படுத்த இயலாத அலைக்கற்றைகளை திரும்ப அளித்துள்ளது. 900 மெகா ஹர்ட்ஸ் முதல் 1800 மெகாஹர்ட்ஸ் வரையிலான அலைக்கற்றையை புதிய தொழில்நுட்பத்துக்கு பொருந்தவில்லை என்று கூறி அந்நிறுவனம் ஒப்படைத்துள்ளது. உத்தரபிரதேசம், மேற்குவங்கம் சர்க்கிள்களில் மட்டும் இது போன்ற ஒரு முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது. 5ஜி சேவையை தொடங்க அனைத்து பணிகளையும் செய்துள்ளதாக கூறியுள்ள அந்நிறுவனம் முதல்கட்டமாக 4 சர்க்கிள்களில் ஆரம்ப பணிகளை செய்திருப்பதாக கூறியுள்ளது. அடுத்த 24 முதல் 30 மாதங்களுக்குள் 40 விழுக்காடு வருவாயை 5ஜி மூலம் ஈட்ட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். 2025 நிதியாண்டில் 3ஜி அலைக்கற்றையை முழுமையாக மூட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கு பதிலாக 2100மெகாஹர்ட்ஸ் அளவுள்ள 4ஜி பேண்டை பயன்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மகாராஷ்டிரா, குஜராத்,ஆந்திரபிரதேசம், மும்பை மற்றும் கொல்கத்தாவில் 3ஜி சேவையை அந்நிறுவனம் மூடிவிட்டது. வரும் நாட்களிலும் இது தொடரும் என்று கூறப்படுகிறது.