அர்ஜுனா என்ன தெரிகிறது?? Inflation தெரிகிறது குருவே!!!!
இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அர்ஜுனர் கண்களுக்கு சுழலும் மீனின் கண் தெரிவதைப் போல தங்களின் இலக்கு தற்போது பணவீக்கமாக உள்ளது என்றார். பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை குறைக்க ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அந்த வங்கி
மத்தியஅரசுக்கு அண்மையில் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் என்ன
அது எப்படி தோல்வியில் முடிந்தது உள்ளிட்டவை குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்திருந்தால் அதற்கு உண்டான விலையை ரிசர்வ் வங்கி தர வேண்டி இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார். இந்திய பொருளாதாரம் மீள வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் ரிசர்வ் வங்கி இயங்கி வருவதாகவும் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் பொருளாதாரத்தை நிலைப்படுத்த, பணவீக்கம் 2 முதல் 6 விழுக்காடுக்குள் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விரும்பினாலும், இந்த அளவை விட சற்றே அதிகம் இருந்தாலும் ரிசர்வ் வங்கியால் சமாளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.