இப்படி செலவு செய்தால் என்ன செய்வது?
இந்திய ரிசர்வ்வங்கி தன்னிடம் உள்ள வெளிநாட்டு பணங்களை அதிகளவில் விற்று வருவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2013-ம் ஆண்டு காலகட்டத்தை டேபர் டான்ட்ரம் என்று அழைப்பார்கள். குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் அதிக வெளிநாட்டு பணத்தை ரிசர்வ் வங்கி செலவழித்த்து அந்நாளில் விவாத பொருளானது. இந்நிலையில் டேபர் டான்ட்ரம் காலகட்டத்தை விட அதிக அளவில் அந்நிய கையிருப்பை ரிசர்வ் வங்கி செலவிடுவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை மட்டும் இந்தியா 38.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை விற்றுள்ளது. இதில் ஜூலையில் மட்டும் மிகஅதிக அளவாக 19 பில்லியன் டாலர்கள் விற்கப்பட்டுள்ளன. இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 80 ரூபாய் என்ற அளவில் இருக்கும்போது இத்தகைய விற்பனை கூடாது என்றும் சில வல்லுநர்கள் கருதுகின்றனர். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 64 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில் இது தற்போது 22 பில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது
நாட்டின் மொத்த அந்நிய நாட்டு பண கையிருப்பு கடந்தாண்டு அக்டோபரில் 642 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. இந்த அளவு தற்போது குறைந்து 550 பில்லியன் டாலர்களாக உள்ளது
டாலர்கள் மட்டுமல்லாது என், யூரோக்களையும் ரசர்வ் வங்கி அதிகம் விற்றுள்ளது. நிலைமை கட்டுக்குள் இல்லை என்றாலும் சீன பணமான யுவானை விட இந்திய ரூபாய் சிறப்பாக வலுவாக உள்ளது
பணவீக்கத்துடன் சரி செய்யப்பட்ட கணக்குப்படி பார்த்தால் இந்திய ரூபாயின் மதிப்பு சீன யுவானை விட 8 விழுக்காடு வலுவாக உள்ளது