வேலைக்காக அமெரிக்கா சென்ற இந்தியர்களின் நிலை என்ன???
பேஸ்புக் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவாக 11ஆயிரம் ஊழியர்களை அந்த நிறுவனம் பணியில் இருந்து நீக்கி அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலும் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்ப்பட்டுள்ளனர். பொதுவாக அமெரிக்காவில் எச்1பி விசாவில் தங்கியிருக்கும் பணியாளர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனம் அனுமதித்தால் 3 ஆண்டுகளும், பின்னர் தேவைப்பட்டால் இன்னும் 3 ஆண்டுகளும் அமெரிக்காவில் தங்கி பணியாற்ற முடியும் மெட்டா நிறுவனம் அறிவித்துள்ள பணிநீக்க உத்தரவுப்படி இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது இந்திய பொறியாளர்கள்தான். பணியில் இருந்து நீக்கப்பட்டாலும் அவர்களுக்கு தேவையான இமிக்ரேஷன் எனப்படும் வசதியை மெட்டா நிறுவனம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த வசதியின்படி குறுகிய காலகட்டத்துக்குள் வேறு இடத்தில் இந்த பணியாளர்கள் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் எச்.1.பி விசா உடைய பணியாளர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும். பணியில் இருக்கும் நிறுவனம் வேலையை விட்டு தூக்கிவிட்டால், எச்.1 பி விசாவில் அமெரிக்காவில் தங்கியிருக்கும் பணியாளர்கள் 60 நாட்களுக்குள் வேறு ஒரு நிறுவன ஸ்பான்சரை பிடித்தாக வேண்டும்.. இவ்வாறு புதிய நிறுவனத்தில் சேராத பட்சத்தில் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.எதிர்பார்த்த அளவுக்கு மெட்டா வெர்ஸ் திட்டம் செயல்படவில்லை என்றும், மெட்டா நிறுவனம் திட்டமிட்ட முதலீடுகளை ஈர்க்கவில்லை என்றும் ,13 % பணியாளர்களை நீக்குவதை தவிற வேறு வழியில்லை என்றும் மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.