22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

யார்ரா இவன்!!!! வெள்ளிக்கிழமை வேலையை விட்டு போனு சொல்லிட்டு, திங்கட்கிழமை ஆபிஸ்க்கு வர சொல்றான்…

மிகப்பெரிய தொகைக்கு டிவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், அண்மையில், அந்த நிறுவனத்தில் பணியாற்றிய பாதிக்கும் அதிகமான ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி இருந்தார். இந்த நிலையில் அதிகரிக்கும் பணி சூழலை சமாளிக்க முடியாமல் அதில் சிலரை மீண்டும் பணிக்கு மஸ்க் அழைத்துள்ளார். தவறுதலாக சிலரை நீக்கிவிட்டதாகவும்,அவர்கள் டிவிட்டருக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்து மஸ்க் இவ்வாறு மீண்டும் வேலை அளித்துள்ளதாகவும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். 7ஆயிரத்து 500 பேர் பார்த்த வேலையில் 3 ஆயிரத்து 700 பேர் நீக்கப்பட்டால் வேலை நடக்காது என்று புரிந்துகொண்ட மஸ்க் இவ்வாறு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் சென்றது என்ற வழக்கு மொழிக்கு ஏற்ப., இன்னமும் டிவிட்டரில் பணியை தொடர்வோருக்கு வேலை பளு மிக அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. சில பணியாளர்கள் வீட்டுக்கு வராமல் அலுவலகமே கதி என்று கிடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே உள்ள பழைய வேலையுடன் சேர்த்து தற்போது கூடுதல் வசதிகளை மஸ்க் அறிமுகப்படுத்த உள்ளதால் டிவிட்டர் பணியாளர்களின் பணிச்சுமை பலமடங்கு அதிகரித்துள்ளது. இவ்வளவு கசிக்கி புழிந்து வேலை வாங்கும் எலான் மஸ்க் தற்போது டிவிட்டரில் பல அதிரடி மாற்றங்களை செய்ய இருக்கிறார் அதிகநேரம் ஓடும் வீடியோவை பதிவேற்றம் செய்யும் வசதி, குறைவான விளம்பரங்களை மக்கள் தேர்வு செய்யும் வசதி ஆகியவை அடுத்தடுத்த நாட்களில் வரஉள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *