வட்டியை குறைக்கிறதா அமெரிக்கா?
அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தைகளை தீர்மானிக்கும் அமைப்பாக அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் என்ற மத்திய வங்கி செயல்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்துக்கு பிறகு அமெரிக்காவில் ஏற்பட்ட பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை அமெரிக்கா உயர்த்தி வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் அமைப்பின் கூட்டம் ஒவ்வொரு முறை கூடும்போதும் உலகளவில் எதிர்பார்ப்பு எகிறுவது வழக்கம். அண்மையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் அமைப்பின் முக்கிய தலைவராக கருதப்படும் ஜெரோம் பாவெல் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்க இருப்பதாக சூசகம் தெரிவித்தார். இதனால் அமெரிக்க பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி காணப்பட்டது. மேலும் தங்கத்தின் மீதான முதலீடுகளும் கணிசமாக உயர்ந்திருந்தன.
இந்த நிலையில அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் சந்தை குழு கூட்டம் வரும் 20 ஆம் தேதி கூட இருக்கிறது. இதன்பிறகு ஜெரோம் பாவெலின் பேச்சில் என்ன அம்சம் இருக்கும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. எப்போதில் இருந்து வட்டியை குறைக்க உள்ளோம் என்று அவர் கூறுவார் என்று ஓராண்டாக பலதரப்பினரும் காத்திருக்கின்றனர். வரும் ஜூன் மாதம் அளவில் வரிக்குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது., அமெரிக்க பணவீக்கம் 2 விழுக்காடுக்கு வரவேண்டும் என்ற இலக்கில் பெடரல் ரிசர்வ் தெளிவாக இருக்கிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் தகவலின்படி வாடிக்கையாளர் பண குறியீடு எனப்படும் பணவீக்கம் 3.2 விழுக்காடாக பிப்ரவரியில் இருக்கிறது. இந்த அளவு என்பது ஏற்கனவே எதிர்பார்த்ததை விடவும் 0.1 விழுக்காடு அதிகமாகும். வரும் புதன்கிழமை நடக்க உள்ள கூட்டத்திலும் பணவீக்கம் எப்படி இருந்தாலும் வரி குறைக்க வாய்ப்பு குறைவுதான் என்பது நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது. அதேநேரம் இந்தாண்டில் 5 முறை வரை கூட வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பணவீக்கத்தைதான் அமெரிக்கா காரணமாக காட்டும் என்பது மற்றொரு நிபுணரின் கருத்தாக உள்ளது