இந்தியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை..
தகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில்நுட்பச் சாதனங்களுக்கு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று இந்தியாவை ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு என சில நிர்வாக கட்டுப்பாட்டு சட்டங்கள் உள்ளன. இந்த சட்டங்களை பயன்படுத்தி உலக வணிக அமைப்புகளுடன் முரண்பட்டு வருகிறது. அதிக இறக்குமதி வரி தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் அளித்துள்ள கோரிக்கை கடிதத்துக்கு பதில் அளிக்கும் கடமை இந்தியாவுக்கு உள்ளது. வரும் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் இந்தியா இதற்கு பதில் அளிக்காதபட்சத்தில் ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆளாகும். கடந்தாண்டே மொபைல் போன்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் தொடர்பான கட்டணங்களுக்கு உலக வணிக அமைப்பான WTO கண்டனம் தெரிவித்திருந்தது. ஆனால் அதை இந்தியா எதிர்த்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு இறக்குமதி வரியை இந்தியா 7 -ல் இருந்து 15 %ஆக உயர்த்தியதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தைவான் உள்ளிட்ட நாடுகள் முறையிட்டனர். எனினும் 20 விழுக்காடு வரை இறக்குமதி வரையை உயர்த்தி உள்ளூர் உற்பத்திக்கு இந்தியா வகை செய்தது. பிரச்சனைக்கு தீர்வு காணும் அமைப்பு இல்லாதபட்சத்தில், ஐரோப்பிய ஒன்றியம், ஒரு பன்னோக்கு நிர்வாக அமைப்புகளை அமைக்கும் முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. MPIA என்ற அமைப்பை உருவாக்கி உலக பொருளாதார அமைப்பான WTo-வில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். ஆனால் இந்த அமைப்பை இந்தியா எதிர்க்கிறது. எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே சுதந்திரமான வணிக ஒப்பந்தம் தேவை என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.