மிஸ் செய்த ஜீ நிறுவனம்…
வால்ட் டிஸ்னி நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை ஜீ நிறுவனம் செலுத்த தவறிவிட்டது. இது கிரிக்கெட் போட்டிகளுக்கான தொகையாகும். தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதை டிஜிட்டலாக ஒளிபரப்பியது தொடர்பாக இந்த தொகை திருப்பி அளிக்கப்பட வேண்டும்.
திடீரென இத்தனை பெரிய தொகையை செலுத்தாமல் அவகாசத்தை ஜீ நிறுவனம் தவறவிட்டதுக்கு காரணம் இருக்கிறது. அந்நிறுவனம் சோனி நிறுவனத்துடன் இணைய இருக்கிறது. அந்த நேரத்தில் பெரிய தொகை பணம் தேவைப்படும் என்பதால் தற்போது வால்ட் டிஸ்னிக்கு ஜீ பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது. மும்பையில் இருந்து இயங்கும் இந்நிறுவனம் பணம் இல்லாமல் தவிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு டிஸ்னி நோட்டீஸ் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் லைசன்ஸ் ஒப்பந்தம் பெற கையெழுத்து பதிவானது.
இது தொடர்பாக ஜீ மற்றும் சோனி நிறுவனங்கள் எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. 2027ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்க டிஸ்னி ஸ்டார் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. அதே நேரம் ஜீ நிறுவனத்துக்கு உள் டெண்டர் போலஒதுக்கப்பட்டது. ஆனால் இதற்கான தொகை இதுவரை பெறப்படவில்லை. உலகக்கோப்பை போட்டிகளை பல்வேறு பிரிவினரும் தங்கள் செல்போன்களிலேயே கண்டுகளித்தது குறிப்பிடத்தக்கது. 140 கோடி இந்தியர்களில் பெரும்பாலானோர் இந்த போட்டிகளை செல்போனில்தான் பார்த்து ரசித்தனர். பெரிய இழப்புகளை அடுத்தடுத்து சந்தித்து வரும் ஜீ குழுமத்தின் பங்கு மதிப்பு 14விழுக்காடு வரை குறைந்தது. மும்பை பங்குச்சந்தையில் இந்த பங்குகள் 7.7%வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.