நிதி திரட்ட முடிவெடுத்துள்ள செப்டோ..

துரித வணிக நிறுவனமான செப்டோ, தனது ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு முன்னதாக 200 முதல் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்ட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் முதலீட்டாளர்களிடம் இருந்து இந்த பணத்தை முதலில் பெற்றுவிட்டு பின்னர் சந்தையில் வெளியிடலாம் என்றும் முடிவு எடுத்துள்ளது. எனினும் இந்தாண்டே ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு தயாராகி விடும் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே நிதி திரட்டும் நிறுவனங்களாக உள்ள எடல் வெயிஸ் நிதி சேவைகள் மற்றும் மோதிலால் ஆஸ்வால் நிதி நிறுவனங்களையும் அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. நிறுவனத்தின் உள்ளூர் முதலீட்டாளர்கள் 2,00 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த முதலீடுகளுக்கு ஆர்வமாக முன்பதிவு செய்கின்றனர். 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வணிகம் நடைபெறும் எனறும் கூறப்படுகிறது. தற்போது வரை உள்ளூர் முதலீட்டாளர்கள் பங்குகள் 30-33%ஆக உள்ளது. இது மேலும் 4-7 விழுக்காடு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
ஜெனரல் கேடலிஸ்ட், நெக்சஸ், உள்ளிட்ட நிறுவனங்களும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளன.
உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு 30 விழுக்காடு பங்குகளை வைத்துள்ள செப்டோ நிறுவனம், முன்னாள் நிறுவனர் கைவால்யா,ஆதித் பலிச்சா ஆகிய இருவரிடமும் 20 விழுக்காடு பங்குகளும் உள்ளன. 1.3 பில்லியன் கேஷ் பேலன்ஸ் இருப்பதாகவும், ஆரம்ப மூலதனம் எதுவும் தேவையில்லை என்றும் பலிச்சா கூறினார். செப்டோ நிறுவனத்தின் பங்களிப்பு காரணமாக சொமேட்டோ,ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை குறைந்தன. சொமேட்டோ நிறுவன பங்குகள் 5.6% குறைந்து 210 ரூபாயாகவும், ஸ்விகி நிறுவன பங்குகள் 4.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு குறைந்துள்ளன. சொமேட்டோ மற்றும் ஸ்விகி நிறுவனத்தின் மதிப்பு 2..2 டிரில்லியரன் மற்றும் 76,480 ரூபாயாக முறையே விற்பனை செய்யப்பட்டது.