அந்த லிஸ்டில் சேர்ந்து கொண்ட ஜொமாட்டோ!!!
உலகின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதார நிலையற்றசூழல் நிலவி வருகிறது. மைக்ரோசாப்ட்,கூகுள் பேஸ்புக், டிவிட்டர் என மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றன, இந்தியா மட்டும் மிஞ்சுமா என்ன? சரியாக வேலை செய்யாத பணியாளர்களை நீக்குவதில் இந்திய நிறுவனங்களும் பணியை தொடங்கியுள்ளனர். உணவு டெலிவரி செய்யும் முக்கிய நிறுவனமான ஜொமேட்டோவில் 3 % பணியாளர்களை நீக்க அந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது டெலிவரி மட்டுமின்றி அனைத்துத் துறைகளையும் சேர்த்து 3 % பணியாளர்களை நீக்குவதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. களப்பணி மட்டுமில்லாமல் நிறுவனத்துக்குள் பணியாற்றும் 3 ஆயிரத்து 800 ஊழியர்களில் 520 பேரை கடந்த 2020ம் ஆண்டு ஜொமேட்டோ நிறுவனம் பணிநீக்கம் செய்தது. அதன்பிறகு நிறுவனத்தில் முக்கியமான 3 தலைமை பணியாளர்கள் வெளியேறியதால் அந்த நிறுவனம் தற்போது ஆட்டம் கண்டுள்ளது எனவே யாரை தூக்குவது என்பது குறித்த பட்டியலை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. பல நிறுவனங்களும் தங்கள் நிறுவனங்களில் புதிய பணியாளர்களை வேலையில் சேர்ப்பதை நிறுத்தி வைத்துள்ள நிலையில் ஜொமேட்டோ நிறுவனம் சில பணியாளர்களை நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெர்பாமன்சை மையப்படுத்தி தொய்வாக உள்ள 3 %பேரை மட்டுமே நீக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.