பயனர் தரவுகளைப் பணமாக்க வாய்ப்பு
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) பயனர் தரவுகளைப் பணமாக்குவதற்கான சிந்தனையை உருவாக்கியுள்ளது.
டெண்டர் ஆவணத்தின்படி, ஆய்வு செய்யப்படும் தரவுகளில் “பெயர், வயது, மொபைல் எண், பாலினம், முகவரி, மின்னஞ்சல், பயண வகுப்பு, பயணிகளின் எண்ணிக்கை, கட்டண முறை, உள்நுழைவு அல்லது கடவுச்சொல்”உள்ளிட்ட பிற விவரங்கள் உள்ளன.
இது மிகவும் முக்கியமான தனிப்பட்ட தரவு. கடந்த கால அனுபவங்கள், வெகுஜன கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் பற்றிய அச்சத்தை அதிகரிக்கின்றன.
தரவுப் பாதுகாப்புச் சட்டம் இல்லாதது நிச்சயமாக கவலைக்குரிய ஒன்று. குளிர்கால கூட்டத்தொடரில் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் தரவு பாதுகாப்பு சட்டத்தை இயற்றுவதற்கான புதிய மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.