அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு குறித்து அரசு விளக்கம்
வெளி நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகள் வரலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனை சுட்டிக்காட்டி மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் இதுவரை அரிசி ஏற்றுமதி குறித்து எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளது.
அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. மேலும் இந்தியாவில் உள் நாட்டுக்கு தேவையான அளவு அரிசி இருப்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
நடப்பு காரிப் பருவத்தில் இந்தியாவில் 6%அரிசி உறபத்தி போதிய மழையின்றி பாதிக்கப்பட்டு உள்ளது. 21.2மில்லியன் டன் அரிசி 2021-2022நிதியாண்டில் இந்தியா ஏற்றுமதி செய்யதுள்ளது. நடப்பு கரிப் பருவத்தில் ஜார்க்கண்ட் ,பீகாரில் பாதிப்பு அதிகமாக உள்ளது. நாடு முழுக்க உள்ள ரேஷன் கடைகளில் கோதுமைக்கு பதில் அரிசியை மத்திய அரசு அனுப்பி வருவது குறிபிடத்தக்கது