கார் உற்பத்தி 26%உயர்வு
இந்தியாவில் தற்போது கார் விற்பனை சற்று மந்தமாக இருக்கிறது. இருப்பினும் இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி, ஓணம், தீபாவளி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்கள் அதிகம் வருகின்றன. செப்டம்பர் தொடங்கி நவம்பர் மாதம் வரை பண்டிகைகள் வரிசை கட்டுவதால் கார்கள் வாங்க மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு மொத்த கார் உற்பத்தி 26% அதிகரித்துள்ளது. நாட்டின் பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் ஆன மாருதி சுசூகி தற்போதே 30.5% உற்பத்தி செய்து வைத்துள்ளது. இதே போல் டாடா கார்களின் உற்பத்தியும் உயர்ந்துள்ளது. ஜூலை, ஆகஸ்ட் வரை மந்தமாக உள்ள விற்பனை , வரும் பண்டிகை சூழலில் வரும் நவம்பர் வரை அதிக கார்கள் விற்க முடிவு செய்யப்பட்டு உள்ளது . கடந்தாண்டு இந்த காலகட்டத்தில் சிப்களை தயாரிக்கும் செமி கண்டெக்டர் உற்பத்தி குறையாவால் கார்கள் விற்பனை மந்தமடைந்து இருந்தது. இந்த சூழலில் தற்போது கார் உற்பத்தி உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாகவும், மின்சார வாகனங்களில் தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாகவும் கார்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உருவாகி உள்ளன.