Tcs-ல் சேர போகிறீர்களா இதை கவனியுங்க
இந்தியாவின் முன்னணி ஐடி ஜாம்பவானாக திகழும் நிறுவனம் tcs எனப்படும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்.
இந்த நிறுவனத்தில் சேரும் பணியாளர்கள் பணிக்காலம் ஒரு ஆண்டு நிறைவடைந்ததும், வருடாந்திர சமபள உயர்வு மட்டும் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட தொகையை ஊக்க தொகை ஆக அளிப்பது வழக்கம்.
இந்நிலையில் அதிகரிக்கும் நிர்வாக செலவு காரணமாக முதல் ஆண்டு ஊக்க தொகையை டி சி எஸ் ரத்து செய்துள்ளது. எனினும் வருடம் தோறும் அளிக்கப்படும் சம்பள உயர்வு வழக்கம் போல தொடரும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டி சி எஸ் நிறுவனத்தில் விளக்கம் கேட்ட போது, உண்மைதான் என்று கூறியுள்ளனர். கொரோனா கால கட்டத்தில் சில ஐடி நிறுவனங்கள் சம்பள குறைப்பில் ஈடுபட்டபோதும் டிசிஎஸ் முழு சலுகைகளையும் பணியாளர்களுக்கு வழங்கி வந்ததாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஓராண்டாக டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி முதல் ஊக்கத்தொகை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ஊழியர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிகரிக்கும் நிர்வாக செலவு, பணியாளர்கள் சம்பளம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளால் ஐ.டி நிறுவனங்கள் இத்தகைய சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்கிறார்கள் துறை சார்ந்த நிபுணர்கள்.