முதலீட்டாளர்களை தேடும் ஸ்பைஸ்ஜெட்
நடுத்தர மக்களும், பட்ஜெட் விலையில், விமான சேவை பெற ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் உதவுகின்றன. இந்த நிலையில், அந்த நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் கடுமையாக சவால்களை சந்தித்து உள்ளது. 2019ல் இரண்டு விமான விபத்துகள், அதன் பின்னர் 2020 முதல் இதுவரை கொரோனா நோயால் பெரியதாக பாதிக்கப்பட்டது என்ற பாதிப்புகள் ஒரு பக்கம். பின்னர் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் 6 விமானங்களை விற்றது.
ஊழியர்களுக்கு சம்பளம் தர கூட முடியாத நிலையிலேயே இருந்து வந்தது என பல்வேறு பிரச்சனைகளை இந்நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில் மீண்டும் 200 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்க்க அந்நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. முதலீடு கிடைத்ததும் பிராந்தியம் மற்றும் சர்வதேச விமான சேவைகளை தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. படிப்படியாக பழைய மேக்ஸ் ரக விமானங்கள் நீக்கப்பட்டு புதிதாக 20 மேக்ஸ் விமானங்கள் களமிறங்க உள்ளன. அண்மையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வரும் அக்டோபர் மாதம் வரை 50% பயணிகளுடன் மட்டுமே இயக்க அந்த நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.