சந்தைக்கு இது புதுசோ புதுசு!!!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஐபோன் 14 சீரிஸ் வகை போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய நேரப்படி (7-9-2022) இரவு 10.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில், ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14 புரோ மேக்ஸ், ஆப்பிள் அல்ட்ரா வாட்ச், ஆப்பிள் AIRPODS PRO உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டது. ஐபோன் 14 சீரிஸில் 4 போன்களும், 2 ஆப்பிள் வாட்ச்களும், நெக்ஸ்ட் ஜெனரேஷன் AIRPODS PRO உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டன. இதே போன்று, ஏ16 பயோனிக் சிப் உள்ளிட்டவையும் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஐபோன் 14ன் தொடக்க விலை 79, 900 ரூபாய் என்றும், ஐபோன் 14 பிளஸ்ன் தொடக்க விலை 89, 900 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 14 புரோ-வின் தொடக்க விலை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 900 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் SE ரகம், ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் – 8, ஆப்பிள் ஏர்பட்ஸ் ப்ரோ- 2 உள்ளிட்டவற்றின் விலையும் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், இவை அமெரிக்காவில் மட்டுமே முதலில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 14 சீரிஸ் செப்டம்பர் 16 முதலும், அல்ட்ரா வாட்ச் செப்டம்பர் 23 முதலும் கிடைக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்லா கால நிலைகளையும் சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சீரிஸ் ஐபோன் மற்றும் வாட்ச் வகைகள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அவசர கால செயற்கைக்கோள் வழி அழைப்புகளை இந்த ஐபோனில் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக சாட்டிலைட் தொடர்பையும் ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. இதில், ios 16A, a16 வகை பயோனிக் சிப், motion stabilization வசதி கொண்ட கேமராக்கள் உள்ளன. இந்த போனில், அதிக நேரம் தாங்கும் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில், விபத்தின் போது தானாகவே ஆபத்து கால அழைப்பை மேற்கொள்ளும் crash detection வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாடல் போன்களும், கூடவே அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சாதனங்களும் சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.