“இந்தியாவின் சில்லறை பணவீக்கம் மேலும் உயரும்”…
இந்தியாவில் ஆகஸ்ட் மாத பணவீக்கம் உயர்வு குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஆய்வு மற்றும் கருத்துக்கேட்டது. இதன்படி கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பணவீக்கம் மீண்டும் உயரும் என்று கூறப்பட்டுள்ளது.
அரிசி, கோதுமை,மற்றும் பருப்பு வகைகள் விலையேற்றம் கண்டுள்ளதால் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே இந்தியாவின் ஏழை மக்கள் விலைவாசி உயர்வால் விழிபிதுங்கி நிற்கின்றனர்.இந்த சூழலில் ஜூலை மாதம் 6.71 விழுக்காடாக இருந்த சில்லறை பணவீக்கம் கடந்தமாதம் 6 புள்ளி 9 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சில மாநிலங்களில் நிலவிய வறட்சி காரணமாக உணவு தாணியங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் கருத்துக்கேட்பில் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2023ம் ஆண்டின் துவக்கம் வரை இந்தியாவின் பணவீக்கம் 6 விழுக்காடாக தொடரும் என மத்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. வங்கிகளுக்கான கடனின் ரெபோ வட்டி விகிதமும் மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதில் சந்தேகம் இல்லை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது……