இந்தியாவில் மொபைல் சாட்டிலைட் சேவை வர 2 வருஷமாகும்…
தொலைதொடர்பு சேவையோ, செல்போன் சிக்னலோ இல்லாத இடங்களுக்காக அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் சாட்டிலைட் கம்யூனிகேசன் என்கிற செயற்கைக்கோள் தகவல் பரிமாற்றம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த வகை சேவை சாதாரண பொதுமக்களுக்கு இந்தியாவில் தற்போது அமலில் இல்லை..தற்போது இந்த சேவை குறித்து அறிய வேண்டிய காரணம் யாதெனில் அண்மையில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மாடலான ஐபோன் 14-ல் மொபைல் சாட்டிலைட் எனப்படும் செல்போனில் இருந்து செயற்கைக்கோளுடன் இணைக்கும் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தியாவில் இந்த வசதி வர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஐபோன் 14-ல் இந்த வசதி வந்திருந்தாலும் ஆண்டிராய்டு போன்களில் இந்த வசதியை உருவாக்கும் பணிகளை கூகுள் நிறுவனம் கடந்த 1ம் தேதி முதல் தொடங்கியுள்ளது.செயற்கைக்கோள் தகவல் பரிமாற்ற வசதியை பெற அதற்கென விதிகளை தனிநபர் பின்பற்ற வேண்டிய சூழல் உள்ளது. மேலும் நிறுவனங்களை பொறுத்தவரை இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் பரிமாற்ற சேவைக்கு அனுமதி பெற ஏதுவாக விதிகளை கடந்தாண்டு மத்திய அரசு மாற்றி அமைத்தது. இதனால் எலான்மஸ்கின் ஸ்டார்லிங்க் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்த செயற்கைக்கோள் தகவல் பரிமாற்ற சேவையை அளிக்க ஆர்வம் காட்டி வருகின்றன. எனினும் இது உடனடியாக அமலுக்கு வராது என கூறப்படுகிறது.