உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையும் உண்மை நிலவரமும்…
சுயசார்பு இந்தியா எனப்படும் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தில், மிக முக்கிய பங்கு வகிப்பது உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டமான PLI.,முதலில் சில துறைகளில் மட்டும் அமல்படுத்திய அரசு, தற்போது பல துறைகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. ஆனால் அதில் உள்ள சாதக பாதங்கள் தெரியுமா?ஐபோன் செல்போன் உற்பத்திக்கு PLI எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அளிக்கப்பட்டது. அதாவது, ஐபோன் புரோ மேக்ஸ் அமெரிக்காவின் சிக்காகோவில் 93 ஆயிரம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டது. இதே செல்போன் இந்தியாவில் 1 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய். இந்த செல்போனை சென்னை அருகே உற்பத்தி செய்யாமல், வெளிநாடுகளில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அதனை அசம்பிள் மட்டும் செய்து அளிப்பது எப்படி மேக் இன் இந்தியாவாகும்.. இவ்வாறு ஒருங்கிணைக்கும் வேலைக்கு மட்டும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையாக மத்திய அரசு, 6 விழுக்காடு தொகையை ஒருங்கிணைக்கும் நிறுவனத்துக்கு அளிக்கிறது. உற்பத்தி செய்யாமல் ஒருங்கிணைப்பு மட்டும் செய்த செல்போனுக்கு இந்திய வாடிக்கையாளர்கள், மாநில ஜிஎஸ்டியாக மட்டுமே 9 விழுக்காடு செலுத்துகிறார். இதில் யாருக்கு லாபமெனில், உற்பத்தி செய்யாமல் அசம்பிள் செய்த நிறுவனத்துக்கு மட்டுமே லாபம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.இதேபோல் உண்மையிலேயே உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் பொருளுக்குத்தான் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை அளிக்கப்பட வேண்டுமென பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை அளிக்கும் முன்பு, இந்தியாவில் ஏற்றுமதி 1.6 பில்லியன் டாலராகவும்,இறக்குமதி 4.4 விழுக்காடாக இருந்தது. ஆனால் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை அளிக்கத் தொடங்கியதும் உற்பத்தி குறைந்து, இறக்குமதி அதிகரித்துள்ளது. அதாவது, ஏற்றுமதி 2. 7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதே சமயம் இறக்குமதி 5.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.உற்பத்தி தளத்தை உயர்த்தும் நோக்கம் கொண்ட PLI திட்டம் சிறந்தது என்றாலும், அதை எப்படி செய்ய வேண்டும், எந்தெந்த துறைகளுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்கான ஆதாரம் உள்ளதா என பார்க்கவேண்டும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது