மேலும் எளிமையாகும் காப்பீட்டு விதிகள்..
காப்பீட்டு நிறுவனங்களுக்கான விதிகளையும், சட்ட திட்டங்களையும் மாற்றி அமைக்கும் பணியில் மத்திய நிதி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. 2020-21ம் ஆண்டில் மட்டும் காப்பீட்டுத்துறை 4.20 விழுக்காடு வளர்ச்சி கண்டு 11.70 விழுக்காடாக உள்ளது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் மருத்துவக் காப்பீடு அதிகளவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறுகிறது. தற்போதுள்ள விதிகளில் முக்கியமானதாக குறைந்தபட்ச மூலதனம் 100 கோடி ரூபாய்க்கும் குறைவாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு செய்வதன் மூலம் காப்பீட்டுத்துறையில் போட்டி வளரும் என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என்றும் நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது. 49 விழுக்காடாக இருந்த காப்பீட்டுத்துறை அன்னிய நேரடி முதலீடு தற்போது 74 விழுக்காடாக உயர இருக்கிறது. காப்பீட்டுத்துறைக்குள் போட்டியாளர்கள் அதிகரித்தால் பொதுமக்களும் அதிகம் பயனடைய உள்ளனர்.இந்தியாவில் தற்போது வரை 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும், 31 ஆயுள் காப்பீடு இல்லாத காப்பீட்டு நிறவனங்கள் உள்ளன. சிறு குறு வணிக நிறுவனங்களும் சந்தையில் நுழையும்பட்சத்தில் காப்பீட்டு சந்தையில் இந்தியா அடுத்த பத்து ஆண்டுகளில் உலகில் 6-வது பெரிய சந்தையாக இருக்கும் என்கிறது ஒரு புள்ளி விவரம். 2020-21 ஆண்டில் மட்டும் இந்தியாவில் காப்பீட்டு பிரீமியமாக 8 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கத்து