12000 கோடி வந்துருக்கு!!!
அமெரிக்க பொருளாதாரம் ஓரளவு சீரான வளர்ச்சி எட்டியுள்ளதை அடுத்து அந்நாட்டின் கடன் வட்டி விகிதம் உயர்வது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தனர்.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு 51 ஆயிரத்து 200 கோடி ரூபாயாக இருந்தது. கடந்தாண்டு அக்டபோர் முதல் இந்தாண்டு ஜூன் வரை மட்டும் மொத்தம் 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ஒரே நேரத்தில் அதிக தொகையை முதலீடு செய்வதும், பின்னர் அதை சுரண்டி எடுப்பதும் தொடர் கதையாகி வருகிறது. சர்வதேச காரணிகளால் இவ்வாறு நிலையற்ற சூழல் நிலவுவதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் சாதகமான சூழல் நிலவியதை அடுத்து செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து 16ம் தேதி வரை மட்டும் 12 ஆயிரத்து 84 கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் பங்குகளாக வாங்கியுள்ளனர்.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் நிலையான பங்குச்சந்தைகளால் அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை பாதுகாப்பாக கருதினர். அவர்களின் முயற்சியும் வீண் போகவில்லை. ஏனெனில் தொடர்ந்து 3 வது மாதமாக அவர்கள் லாபத்தை பதிவு செய்துள்ளனர்.