பணத்தை வாரி இறைக்கும் அதானி….
கடந்த மே மாதம் அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களை வாங்க இருப்பதாக அதானி குழுமம் தெரிவித்திருந்தது. இதற்கான பணிகள் தற்போது முடிந்துள்ளன. அதாவது, அம்புஜா மற்றும் ஏசிசி சிமென்ட் நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளை ஹோலி சிம் என்ற நிறுவனம் தன்வசம் வைத்திருந்தது. இந்த சூழலில் ஹோலிசிம் நிறுவன பங்குகளை, பங்குச்சந்தை ஒழங்குமுறை அமைப்பான செபியின் விதிகளுக்கு உட்பட்டு என்டேவர் டிரேட் மற்றும் முதலீட்டு நிறுவனம் மூலமாக அதானி வாங்கினார்.
இந்த நிலையில் அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய அம்புஜா சிமென்ட் நிறுவன இயக்குநர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஹேலி சிம் பங்குகளில் பெரும்பாலானவை தற்போது அதானி வசம் உள்ளது. அதாவது அம்புஜா சிமென்ட் நிறுவனத்தில் 63.15 விழுக்காடு பங்குளும், ஏசிசி நிறுவனத்தில் 56 புள்ளி69 விழுக்காடு பங்குகளையும் தற்போது அதானி வைத்துள்ளார். இந்த இருநிறுவனங்களின் பங்கு மதிப்பு மட்டும் 6 புள்ளி 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இரு பெரிய சிமெண்ட் நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ள அதானி, அந்த நிறுவனங்களின் முழு நிர்வாக பொறுப்பையும் தனதாக்கியுள்ளார்..
சிமெண்ட் நிறுவனங்களை வாங்கியுள்ள அதானி, ஏன் சிமெண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்தார் என்பதையும் விளக்கியுள்ளார். பொருளாதாரம் சார்ந்த ஆற்றல் கட்டணம், பொருட்கள்,டிஜிட்டல் கட்டமைப்பை நிஜமாக்குவது உள்ளிட்டவற்றில் சிமெண்ட்தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அதானி கூறியுள்ளார். கிரீன் சிமெண்ட்டையும் தங்கள் நிறுவனம் விரைவில் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்