கிரெடிட் கார்டில் இனி கூடுதல் கட்டணம் – ஐசிஐசிஐ அறிவிப்பு
“20 செப்டம்பரில் இருந்து கிரிடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை கட்டினால் 1 விழுக்காடு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்” இப்படி ஒரு குறுஞ்செய்தி எல்லா ஐசிஐசிஐ வங்கி கிரிடிட் கார்டு வைத்திருப்போருக்கும் வந்திருக்கும். விவரம் என்னவெனில், ஆன்லைன் செயலிகளான கிரெட், பேடிஎம் உள்ளிட்ட செயலிகளில் வீட்டு உரிமையாளரின் கணக்குக்கு கிரிடிட் கார்டு மூலம் இதுவரை வாடகை செலுத்தி வந்தால் அவர்களுக்கு எந்த வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாமல் இருந்து வந்தது. ஆனால் இனி ஒரு சதவீதம் கூடுதல் பணம் வசூலிக்கப்பட உள்ளது.
இது எந்த வகையான கட்டணம் ஏன் எனில், கடைக்குசென்று பொருட்களை கிரிடிட் கார்டில் வாங்கினால் மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட் எனப்படும் சலுகை இருக்கும் ஆனால் வீட்டு வாடகை செலுத்தும்போது இந்த கட்டணம் பொருந்தாமல் இருந்தது.இதனால் வங்கிகளுக்கு சிறிய இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சரிசெய்யும் வகையில் கிரிடிட் கார்டில் ஆன்லைன் செயலிகளில் வாடகை செலுத்தினால் அதற்கு 1 விழுக்காடு செயல்பாட்டு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கிரிடிட் ரொட்டேஷன் எனும் முறையில் வங்கிகளுக்கு தெரியாமல் பரிவர்த்தனைகள் நடப்பதாலும், தவறாக கிரிடிட் கார்டுகளை பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது