மகேந்திரா பைனான்சின் வாராக்கடன் அதிகரிக்க வாய்ப்பு….
வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் வாங்க நிதி அளித்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று மகேந்திரா அன்ட் மகேந்திரா பைனான்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் கடன் மீட்புப் பிரதிநிதியாக செயல்பட்ட நபர் ஒருவர் ஜார்க்கண்டில் பெண் விவாசாயியை டிராக்டர் ஏற்றி கொன்றுவிட்டதாகவும், அவர் 3 மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து களமிறங்கிய ரிசர்வ் வங்கி, கடந்த வியாழக்கிழமை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் 3-ம் நபரை வைத்து பணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில் மகேந்திரா அன்ட் மகேந்திரா பைனான்ஸ் நிறுவனத்தின் வாராக்கடனை அதன் உரிமையாளர்களே வசூலிக்க முயன்றால் அது தோல்வியில் முடியும் என்று ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது
இந்த நிலையில் தங்கள் நிறுவன பணியாளர்களை வைத்தே கொடுத்த கடன் மற்றும் அதற்கான வட்டியை வசூலித்து வருவதாகவும் எந்த விதிமீறலும் இல்லை என்றும் மகேந்திரா நிறுவன அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொடுத்த கடனுக்கு வட்டி கட்டாத நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதில் மாதம் 4 முதல் 5 ஆயிரம் வாகனங்கள் மட்டும் மீட்கப்படுவதாகவும், ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகளால் தற்காலிகமாக நிதி மற்றும் வருவாய் இழப்பு ஏற்படுவது இயல்புதான் என்றும் மகேந்திரா பைனான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.