வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு
முன் எப்போதும் இல்லாத அளவாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சமாக 81 ரூபாய் 62 பைசாவாக உள்ளது.
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் அமெரிக்க பாண்டுகள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது
அமெரிக்க பங்குச்சந்தைகள் வலுவடையத் தொடங்கியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் இந்திய பங்குகள் மீது ஆர்வம் காட்டாமல் உள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு சரிந்து வந்தாலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது இந்திய ரூபாய் மதிப்பு சரிவதை சற்று தடுக்கும் என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்
இந்திய ரிசர்வ் வங்கி எடுக்கும் கொள்கை முடிவை பொருத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது
சர்வதேச பண பரிமாற்ற சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பைப் போலவே ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பும் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது
இதேபோல் கனடா நாட்டின் டாலர் மற்றும் டாலருக்கு நிகரான யூரோவின் மதிப்பும் கணிசமாக சரிந்துள்ளன.
அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பை சரிசெய்யும் வகையில் சீனாவும்,ஜப்பானும் தங்கள் நாட்டு ரிசர்வ்வங்கிகள் மூலம் தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.