டாடாவின் தந்திரம்…
டாடா குழுமத்தில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன இவற்றில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் குறிப்பிட்ட 15 நிறுவனங்களை மட்டும் பட்டியலிட அந்த குழுமம் முடிவெடுத்துள்ளது. முன்னதாக மொத்தம் 29 நிறுவனங்களை பட்டியலிட்டு முதலீடுகளை ஈர்க்க அந்த குழுமம் திட்டமிட்டது ஆனால் தற்போது அந்த முடிவை பாதியாக டாடா குழுமம் குறைத்துக்கொண்டுள்ளது.
வியாபாரத்தில் நிலவும் போட்டியை சமாளிக்கவும், இருக்கும் நிறுவனங்களை வலுப்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை டாடா குழுமத்தின் தலைவராக உள்ள சந்திரசேகரன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தற்போது அந்த குழுமத்தின் வருவாய் மட்டும் 128 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், சந்தை மதிப்பு 255 பில்லியன் அமெரிக்க டாலராகவும் உள்ளது
கடந்த வாரம்தான் டாடா நிறுவனம் தனது ஸ்டீல் வணிகத்தில் தொடர்புடைய 7 சிறு நிறுவனங்களை ஒன்றாக இணைத்தது.
இதேபோல் கடந்த மார்ச் மாதம் டாடா காஃபி நிறுவனத்தை டாடா கன்சியூமர் புரோடெக்ட்ஸ் நிறுவனத்துடன் டாடா குழுமம் இணைத்தது.
விமானம் மற்றும் பாதுகாப்புத்துறையில் உள்ள உபரி நிறுவனங்களையும் தனது டாடா ஏரோஸ்பேஸ் மற்றும் டிஃபென்ஸ் நிறுவனத்துடன் டாடா குழுமம் இணைத்துக்கொண்டது.
இதேபோல் விமானத்துறையில் 3 நிறுவனங்களை டாடா குழுமம் வரும் 2024ம் ஆண்டுக்குள் ஏர் இந்தியா என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவர பணிகளை செய்து வருகிறது
பெரிய நிறுவனங்களுக்கு போட்டியாக தங்கள் கைவசம் இருக்கும் நிறுவனங்களை வலுப்படுத்த டாடா அமைத்து வரும் வியூகம் தொழில்துறையில் முக்கியமாக பார்க்கப்படுகிறது