போலி ஆவணங்களில் சிம்கார்டு வாங்கினால் 1 ஆண்டு சிறைதண்டனை…
மத்திய அரசு அண்மையில் தொலைதொடர்பு வரைவு சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்துள்ளது. அதன்படி சிம்கார்டு வாங்க போலி ஆவணங்கள், சமூக வலைதலங்களான ஓடிடி நிறுவனங்களில் போலி பெயர்களை குறிப்பிட்டால் அதிகபட்ச தண்டனையாக ஒரு வருட சிறை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது
சைபர் குற்றங்களை குறைக்கும் வகையில் இந்த புதிய வரைவு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதலங்கள் மற்றும் நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் கேஒய்சி, பதிவேற்றுவதை கட்டாயமாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
ஒரு நபருக்கு தெரியாத நபரிடம் இருந்து அழைப்புகள் வந்தால் மறுமுனையில் இருப்பவர் உண்மையிலேயே சரியான ஆளா இல்லை மோசடி நபரா என்பதை கண்டுபிடிப்பதன் மூலம் நிதி இழப்பு, சைபர் மோசடிகள் குறைக்க முடியும் என்பதால் மத்திய அரசு இந்த புதிய சட்டத்தில் தீவிரம் காட்டி வருகிறது
இதற்கான பூர்வாங்க பணிகளை செய்ய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது