மீண்டும் வட்டி விகிதத்தை அதிகரித்த ரிசர்வ் வங்கி…
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிசர்வ் வங்கியின் நிதிகொள்கைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அந்த வங்கியின் ஆளுநர் சக்திகாந்ததாஸ், வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
ரெபோ விகிதம் எனப்படும் இந்த வரி உயர்வு காரணமாக வாகனம், வீட்டுக்கடன், தனிநபர் கடன்களின் வட்டி விகிதமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்தவே ரெபோ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை அடுத்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனின் வட்டி விகிதம் 5.4-ல் இருந்து 5.9 % ஆக உயர்ந்துள்ளது
மொத்தம் 6 பேர் கொண்ட ரிசர்வ் வங்கி கூட்டத்தில் 5 பேர் வட்டி உயர்வுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படுகிறது.
உணவப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளதால் அதனை சமாளிக்கும் வகையில் ரெபோ வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் பணவீக்கம் 6.7% ஆக உள்ளதாக கூறிய அவர், வரும் நிதியாண்டின் முதல் காலாண்டில் பணவீக்கம் 5 புள்ளிகளாக சரிய வாய்ப்புள்ளது என்றார். கடந்த மே மாதம் 4 %ஆக இருந்த ரெபோ வட்டி விகிதம், கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து அதிகரித்து 5.9% ஆக உயர்ந்துள்ளது. 190 அடிப்படை புள்ளிகள் மே மாதத்துக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது