இந்திய நிறுவனத்துக்கு தடை விதித்த அமெரிக்கா
மும்பையை சேர்ந்த தி பாலாஜி பெட்ரோ கெம் பிரைவேட் என்ற நிறுவனம் ஈரானில் இருந்து பெட்ரோ கெமிக்கல்கள், மெத்தனால் மற்றும் பேஸ் ஆயில் ஆகியவற்றை ஈரானில் இருந்து வாங்கியுள்ளதாகவும்,சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட டிர்ல்லியன்ஸ் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் மூலமாக திபாலாஜி நிறுவனம் இந்த எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது
இந்திய நிறுவனம் மட்டுமின்றி மொத்தம் 8 நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அவை, ஐக்கிய அரபு அமீரகம்,ஹாங்காங் மற்றும் சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களாகும்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ள நிலையில், அந்நாடு இந்திய நிறுவனம் ஒன்றின் மீது தடை விதித்துள்ளது சரச்சையாகியுள்ளது
ஈரானுடன் இந்தியா நட்பு பாராட்டி வரும் இந்த நேரத்தில் அமெரிக்க அரசின் இந்த முயற்சி அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
ஈரானில் இருந்துபெட்ரோலிய பொருட்களை இந்தியா இறக்குமதி செய்ய அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி திபாலாஜி நிறுவனம் செயல்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த நிறுவனம் மார்ச் 2021 வரை மட்டும் 597 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது
பெட்ரோ கெமிக்கல்களை வணிகம் செய்த இந்த நிறுவனம் கடந்த ஜனவரியில் விவசாய பொருட்கள் இறக்குமதி செய்ய அனுமதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.