ஏர்டெல் 5ஜி பிளான் கட்டணம் எவ்வளவு..?
பார்த்தி ஏர்டெல் நிறுவனம் 5ஜிசேவையை கடந்த 1ம் தேதி முதல் 8 நகரங்களில் சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சூழலில் இந்தியாவில் வாடிக்கையாளர்களில் 8முதல் 9% பேரிடம் மட்டுமே 5ஜி வசதியுள்ள போன் உள்ளது. அவர்களிடம் தற்போது 5ஜிக்கான பிரீமியம் வசூலிக்க இயலாத சூழலில் ஏர்டெல் உள்ளது. அந்த நிறுவனம் தற்போது ஒரு வாடிக்கையாளரிடம் சராசரியாக 200 ரூபாய் வசூலிக்கிறது எனில் இது வரும் நாட்களில் 300 ஆக உயர வாய்ப்புள்ளது. வரும் டிசம்பரில் பெரிய நகரங்களிலும், வரும் 2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை ஏர்டெல் வழங்க உள்ளது.
தாய்லாந்தில் இதுபோல 5ஜி சேவைக்கு அதிக கட்டணம் வசூலித்ததால் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு பெரிய பலன் இல்லை என்று கூறப்படுகிறது.
போட்டி நிறைந்த துறை என்பதால் பிற போட்டியாளர்கள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதை பார்த்த பிறகே தங்கள் நிறுவனம் 5ஜி கட்டணம் நிர்ணயிக்கும் என்றும் ஏர்டெல் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முன்னணி செல்போன் நிறுவனங்களுடன் ஏர்டெல் நிறுவனம் தொடர்பில் இருந்து வருகிறது. வரும் நாட்களில் 5ஜி சேவையை அதிகம் பெறச் செய்ய முதலில் செல்போன்களில் 5ஜி வசதி இருக்கவேண்டும் என்பதால் முதலில் செல்போன்களை மக்கள் மாற்ற வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் பலரும் 4ஜியே போதும் என்ற நிலையில் உள்ளனர் என்பதே நிதர்சனமாக உள்ளது.