ஆஃபர் லெட்டரை தந்துவிட்டு ஜகா வாங்கிய நிறுவனங்கள்…
தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணி நிறுவனங்களாக கருதப்படும் விப்ரோ, இன்போசிஸ் மற்றும் டெக் மகிந்திரா ஆகிய நிறுவனங்கள் அண்மையில் fresherகள் எனப்படும் முதல் முறை பணியாளர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்தனர். அவர்களுக்கு ஆஃபர் லெட்டர்களும் அளிக்கப்பட்டன. ஆனால் அவர்களை பணியில் அமர்த்துவதற்கு நீண்ட காலத்தை அந்த நிறுவனங்கள் எடுத்துக்கொண்டுள்ளனர். அப்படி இருந்தாலும் பரவாயில்லை, பணியில் சேர்த்துக்கொள்வார்கள் என நம்பியிருந்த தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு அந்த நிறுவனங்கள் பேரிடியை அளித்துள்ளன.
அவர்களுக்கு அளித்துள்ள மின்னஞ்சலில் உங்கள் கல்வித்தகுதி போதுமானதாக இல்லை எனவே உங்களுக்கு அளித்த ஆஃபர் லெட்டர்களை கேன்செல் செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர். உலகளாவிய மந்தநிலை நீடிக்கும் நிலையில் தங்களுக்கு எப்படியாவது வேலை கிடைத்துவிடும் என நம்பிக்கையுடன் இருந்த இளைஞர்களுக்கு இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாபார சூழல் சரியில்லாத காரணத்தால் புதிதாக ஆட்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து பணியில் சேர்ப்பதை பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது நிறுத்தி வைத்துள்ளனர்.
பெரிய ஜாம்பவான் நிறுவனங்களான கூகுள், பேஸ்புக்,மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்கள் கூட தங்களின் ஏற்கனவே உள்ள பணியாளர்களையே பணிகளுக்கு பயன்படுத்துகிறார்களே தவிற புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
திடீரென கொடுத்த ஆஃபர் லெட்டர்களை ரத்து செய்த நிறுவனங்கள் குறித்து ஆத்திரமடைந்த இளைஞர்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தங்கள் ஆதங்கங்களை தெரிவித்து வருகின்றனர்.