கல்லா கட்டும் நிறுவனங்கள்…
பண்டிகை நாட்களை குறிவைத்து முன்னணி மின் வணிக நிறுவனங்கள் விற்பனை நடத்தும் போக்கு கடந்த சில ஆண்டுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது லாபகரமானதும் கூட என்று நிரூபித்துள்ளது சமீபத்திய புள்ளி விவரம். கடந்தாண்டு பண்டிகை கால விற்பனையை விட இந்தாண்டு பண்டிகை கால விற்பனை முதல் வாரத்தில் 30% உயர்ந்துள்ளது. முதல் தர பெரிய நகரங்களைவிடவும், 2, மற்றும் 3 ம் நிலையில் உள்ள குட்டி நகரங்களில் தான் 60% வளர்ச்சி காணப்பட்டுள்ளதாக ஈசிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. வழக்கமான நாட்களில் நடக்கும் மின் வணிக வர்த்தகத்தைவிட பண்டிகைகால விற்பனையை மக்கள் 5 மடங்கு கூடுதலாக விரும்புவதாகவும் அந்த நிறுவனம் கூறுகிறது. கடந்தாண்டை விட இந்தாண்டு விற்பனை 1.3மடங்கு அதிகரித்துள்ளது என்றும் ஈசிகாம் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. சந்தையில் உள்ள விலை,பற்றாக்குறை,தொலைதூர சிந்தனை உள்ளிட்ட அம்சங்கள் மின்வணிக நிறுவனங்களைத்தவிர வேறு யாரும் சிறப்பாக கையாள முடியாது என்றும் ஈசி காம் நிறுவனம் கூறுகிறது. உற்பத்தித்துறை பொருட்களை14 % கூடுதலாக மின்வணிக நிறுவனங்கள் விற்றுத்தள்ளியுள்ளனர் என்றும் ஈசிகாம் நிறுவன உரிமையாளர் புனித் குப்தா தெரிவித்துள்ளார்.