வாட்ஸ்ஆப் பாதுகாப்பானது இல்லையா ??
டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமாக இருப்பவர் பாவெல் துரோவ். இவர் அண்மையில் ஒரு பரபரப்பு பதிவை செய்திருந்தார்.
அதில் வாட்ஸ்ஆப் செயலியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், ஹேக்கர்கள் மிக எளிதில் தரவுகளை அனுக முடிவதாகவும் கூறி அதிரவைத்துள்ளார்.
உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலியில் ஏகப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாகவும், ஒரே ஒரு வீடியோகால் லிங்க் மூலம் ஹேக்கர்கள் மிக எளிதாக வாட்ஸ் ஆப் செயலிக்குள் புகுந்து தரவுகளை திருட அதிக வாய்ப்புள்ளது என்றும் பாவல் கூறியுள்ளார்.
மேலும் வாட்ஸ் ஆப் சீரான இடைவெளியில் பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்து வருவதாக கூறினாலும் அதில் அத்தனை பிரச்னைகள் இருப்பதால் அந்த செயலியை தாம் தனது போனில் இருந்து நீக்கிவிட்டதாகவும் பாவெல் கூறியுள்ளார். மேலும் வாட்ஸ்ஆப் செயலியே உலவு பார்க்கும் செயலி என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
பாவெலின் இந்த கருத்து உலகளவில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்ஆப்புக்கு போட்டியாக டெலிகிராமும்,சிக்னல் செயலியும் களமிறங்கியுள்ளன. ஆனால் வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களே அதிகம் உலகளவில் உள்ளனர்.
மெட்டாநிறுவன தயாரிப்பான வாட்ஸ்ஆப்,இந்த குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஒவ்வொரு முறை வாட்ஸ்ஆப்புக்கு பிரச்னை வரும்போதும், மக்கள் டெலிகிராம் மற்றும் சிக்னலை நாடி செல்லும் நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.