கவனம் ஈர்த்து வரும் ராகுல்காந்தியின் யாத்திரை
தேசிய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல்காந்தி பல்வேறு மாநிலங்களுக்கு நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் துவங்கிய பயணம் கேரளா,கர்நாடகத்தில் கவனம் பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூருவில் கொட்டும் மழையில் உரையாற்றிய ராகுல்காந்தியின் புகைப்படம் இணையத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. இதேபோல் யாத்திரை சென்றபோது சிறுமி ஒருவருக்கு காலணியை சரிசெய்தும், சாதாரண மக்களிடம் பேசியும் ராகுல்காந்தி கவனம் ஈர்த்து வருகிறார்.
இதேபோல் கேரளாவில் நடந்த யாத்திரையின்போது, ரமேஷ் சென்னிதாலாவிடம் கலகலப்பாக பேசிய ராகுல்காந்தி, சமோசா பற்றி ஜோக் அடித்த காட்சியும் இணையத்தை கலக்கி வருகிறது. அதில் கடைக்கு சென்று சமோசா கேட்டபோது, அது ஒரு பாதி சைவம், மற்றொரு பாதி அசைவம் என்று சர்வர் கூறியதாகவும், இது தமக்கு புதிதாக இருந்த்தாகவும் ராகுல்காந்தி பேசினார்.
வலிகள் மிகுந்த பயணித்தின்போதும் கூட ராகுல்காந்தி கலகலப்பாக பேசி வருவதாகவும், எளிதில் அனுகும் வகையில் இருப்பதாகவும் ராகுல்காந்தி பற்றி கட்சி தொண்டர்கள் சிலாகித்து வருகின்றனர். மழையில் அபாரமாக பேசியது, சிறுமிக்கு உதவியது, சாதாரண மக்களுடன் கலந்து ஆலோசிப்பது,கட்சி நிர்வாகிகளிடம் மிக எளிமையாக பழகுவது ஆகியன தேசிய அளவில் ராகுல்காந்தி பற்றிய பிம்பத்தை உயர்த்தி காட்டி வருகிறது