கனடாவில் மாணவர்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்
கனடாவில் பல்வேறு துறைகளில் ஆட்கள் பற்றாக்குறை அதிகம் இருந்து வருகிறது, இந்த நிலையில் கனடாவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து படிக்க வரும் மாணவர்கள் ஒரு வாரத்தில் 20 மணி நேரம் மட்டுமே பகுதி நேரமாக வேலை செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன
நீக்கப்பட்ட கட்டுப்பாடுகள்,வரும் நவம்பர் 15ம் தேதியில் இருந்து அடுத்தாண்டு இறுதிவரை தொடர உள்ளது
முழுநேரமாக படிப்போருக்கு மட்டுமே இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது
அந்த நாட்டில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் விகிதம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 6விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதனை சரிசெய்யவே சர்வதேச அளவில் இருந்து படிக்க வரும் மாணவர்களை பயன்படுத்த அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. கனடாவில் படிக்கும் மாணவர்கள் அதிகம் பேர் பகுதிநேர வேலை செய்வதால் அந்த நாட்டில் ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளதாகவும், தினக்கூலி குறையும் என்றும் அந்த நாட்டு பொருளாதார நிபுணர்களும், வழக்கறிஞர்களும் தெரிவிக்கின்றனர். உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பேர் மேற்படிப்பு படிக்க விரும்பும் இடமாக கனடா உள்ள நிலையில் அங்கு சென்று படிக்கும் மாணவர்கள் தங்கள் செலவுக்கு பகுதி நேர வேலை அதிகம் செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து படிக்க சென்ற மாணவர்களுக்கும் அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.