ஐடி துறையில் சேர நினைப்பவர்களுக்கான சோகமான சேதி….
உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது.இதன் காரணமாக ஐடி நிறுவனங்களில் புதிதாக பணியாளர்களை நியமிக்கும் அளவு கடுமையாக குறைந்துள்ளது. மொத்த அளவில் 20%மட்டுமே வரும் ஆண்டு ஆட்களை தேர்வு செய்ய ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
சர்வதேச அளவில் நிலவும் நிலையற்ற சூழல் காரணமாக ஐடி நிறுவனங்களில் புதிதாக ஆட்களை தேர்வு செய்வதை நிறுவனங்கள் மறுபரிசீலனை செய்து வருகின்றன.
இந்தியாவில் அதிகரித்து வரும் செலவு காரணமாக ஐடி ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவும் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ந்துள்ளது. கிட்டத்தட்ட 9%அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது.
ஐடி நிறுவனங்களில் அடுத்தாண்டு வளர்ச்சி 5 முதல் 7% இருக்கும் என்ற போதிலும் இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் ஊழியர்களை வைத்தே பணிகள் செய்ய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெரிய நிறுவனங்களான, பேஸ்புக்,மெட்டா நிறுவனங்கள் தங்கள் சிக்கன நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
உலகளவில் இந்தாண்டு ஐடி நிறுவனங்களுக்கு செலவு செய்யும் பணத்தின் அளவு 4.5 டிரில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த 12 மாதங்களில் பரவலாக அனைத்து ஐடி நிறுவனங்களும் புதிதாக ஆட்களை பணியமர்த்தாமலும்,பழைய ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் திட்டமிட்டுள்ளன.
இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி,பொருளாதார மந்தநிலை வந்தாலும் ஐடி நிறுவனங்களில் திறமையான பணியாளர்களுக்கும், தொழில்நுட்பமும் பாதிக்கப்படாது என்றும், சில தொழிலாளர்கள் பாதிக்கப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.