ஐபோனில் வருகிறது புதிய வசதி…
செல்போன்கள்,டேப்லட்கள்,ஹெட்போன்கள்,கேமிராக்களுக்கு டைப்-சி சார்ஜர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியனில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து வகை ஆண்டிராய்டு போன்களிலும் கிட்டத்தட்ட டைப்சி சார்ஜர் வசதியே உள்ளன. ஆனால் ஆப்பிள் போன்களில் மட்டும் தங்களுக்கே உரிய லைட்டனிங் போர்ட் வசதி மட்டுமே உள்ளது. இந்த நிலை விரைவில் மாற உள்ளது.
இதுகுறித்து புளூம்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த மாடலாக உள்ள ,ஐபாட்,ஏர்பாட் உள்ளிட்டவற்றிற்கு வரும் 2024ம் ஆண்டு முதல் டைப்-சி சார்ஜ் வசதி உருவாக்கப்பட உள்ளது. இதேபோல் ஐபோன் 15-ல் அடுத்தாண்டிலேயே டைப்-சி ரக சார்ஜிங் வசதி கிடைக்க உள்ளது.
துவக்க நிலையில் உள்ள ஐபேட்களில் இந்தாண்டு இறுதியில் இருந்தே டைப்-சி சார்ஜிங் வசதி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் மற்றும் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தது 3 வகையான சார்ஜர்களை வைத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள டைப்-சி ரக சார்ஜர் மற்றும் ஒயர்களால் அனைத்து தரப்பு போன்கள்,டேப்லட்களுக்கும் ஒரே சார்ஜர் மற்றும் ஒரே டைப்-சி சார்ஜிங் கேபிள் போதுமானதாக இருக்கும்.இதனால் ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.