டாடா குழுமத்துடன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பேச்சுவார்த்தை..
மிகப்பெரிய தொழில் ஜாம்பவான் நிறுவனமான டாடா குழுமத்தில் ஏர் இந்தியா-விஸ்தாரா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இயங்க வருகின்றன. இந்த நிலையில் விஸ்தாராவையும் ஏர் இந்தியா நிறுவனத்தையும் இணைக்கும் முயற்சி குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
விஸ்தாரா நிறுவனத்தில் 49 விழுக்காடு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடமும், 51 விழுக்காடு பங்கு டாடா நிறுவனத்திடமும் உள்ளன.
இதேபோல் மலேசிய நிறுவனமான ஏர் ஏசியாவில் டாடாவின் பங்கு 83.67விழுக்காடு உள்ளது. 100 விழுக்காடு வாங்கவும் டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
விஸ்தாரா நிறுவனமும், ஏர் இந்தியா நிறுவனமும் தற்போது தனித்தனியாக இயங்கி வரும் சூழலில் விரைவில் குருகிராமை தலைமை இடமாக கொண்டு இரண்டு நிறுவனங்களும் ஒரே குடையின்கீழ் இயங்க உள்ளன..
ஏர் ஏசியாவை இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய வெளிநாட்டு விமான சேவைகள் இணைக்கப்பட்ட பிறகு விஸ்தாராவையும், ஏர் இந்தியாவையும் இணைக்க டாடா திட்டமிட்டுள்ளது.
இந்த இணைப்புகள் வரும் 2024ம் ஆண்டுக்குள் முடிக்க தீவிர முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் 2027ம் ஆண்டுக்குள் மொத்த விமான சந்தையில் 30விழுக்காடு இடத்தை பிடிக்க வேண்டும் என்ற இலக்கை டாடா குழுமம் வைத்து அதற்கான பணிகளை செய்து வருகிறது.
புதிதாக ஏர் இந்தியா நிறுவனத்துக்காக 300 விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. அவை ஏர்பஸ் அல்லது போயிங் நிறுவனங்களின் கலவையாகவோ,அல்லது தனியாகவோ இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது