27,400 கோடி ரூபாய் – போயே போச்சு!!!!
அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பண வீக்கம் உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் கடந்த செப்டம்பர் 21ம் தேதி கடன் விகிதத்தை 0.75அடிப்படை புள்ளிகளை உயர்த்தியது, இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் ஆட்டம் கண்டன.
ஆயிரத்து 500 புள்ளிகளை இழந்த சென்செக்சில் இருந்து மட்டும் இந்த அறிவிப்புக்கு பிறகு 27 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எடுத்துள்ளனர்
6 துறைகளின் பங்குகளை அமெரிக்க பெடரல் ரிசர்வின் அறிவிப்புக்கு பிறகு முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர், அவை, எண்ணெய்,தகவல் தொழில்நுட்பம்,எரிவாயு, உலோகம், நிதி மற்றும் மின்சாரத் துறைகளாகும்.
இந்தியாவில் இருந்து பறந்து சென்ற நிதி முதலீடுகளில் தகவல் தொழில்நுட்ப பங்குகளின் அளவே மிக அதிகமாகும். அதாவது 9 ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்கு தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் பறந்து சென்றுள்ளன.
மும்பை பங்குச்சந்தையில் நிலைமை இப்படி இருக்க, தேசிய பங்குச்சந்தை சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் 1 விழுக்காடு பங்குகள் மட்டுமே வெளியே சென்றுள்ளன
வெளிநாட்டு முதலீடுகள் அதிகம் இருக்கும் சந்தையை விட இந்திய பங்குச்சந்தையான தேசிய பங்குச்சந்தை வலுவாக உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் 22.3% சந்தை முதலீடுகள் உயர்ந்துள்ளதாகவும்,4.3%மட்டுமே சரிவை சந்தித்துள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.