15 நிமிடம் சார்ஜ் செய்தால் 220 கிலோமீட்டர் போகும் கார்….
மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் உலகளவில் மிகவும் புகழ்பெற்ற ஜெர்மன் நிறுவனமாகும். அதிநவீன சொகுசு கார்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் தற்போது EQE ரக கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் மின்சார கார் இரண்டு வகைகளில் வருகிறது
350 4 மேட்டிக் மற்றும் 500 4 மேட்டிக் ஆகிய ரகங்களில் வெளியிடப்பட்டுள்ள மின்சார கார்களில் அதிநவீன மற்றும் நெடுநாட்கள் உழைக்கும் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 220 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் வகையில் இந்த கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதிநவீன சார்ஜிங் வசதி மற்றும் பின்சக்கரத்தில் பொருத்தப்பட்டுள்ள அட்டகாசமான மோட்டார்கள் ஆற்றலை அதிகப்படுத்துவதாக மெர்சிடீஸ் நிறுவனம் கூறியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் முழுக்க முழுக்க மின்சார காரான மெர்சிடீஸ் பென்ஸ் அடுத்தாண்டு இந்தியாவில் சந்தைக்கு வருகிறது. இதன் விலை விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை. ஓரிரு நாட்களில் விலை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.