புது முதலாளிக்கு டிவிட்டர் ஊழியர்களின் திறந்த மடல்…
சென்னை 28 பட பிரேம்ஜிபோல கிரீசுக்கு வருவாரா மாட்டாரா என்பதைப்போல டிவிட்டரை பிரபல தொழிலதிபர்
எலான் மஸ்க் வாங்குவாரா மாட்டாரா என்ற நீண்ட நெடிய வாதம் சென்றுகொண்டிருக்கிறது
இந்த சூழலில் டிவிட்டரை வாங்குவதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார் எலான் மஸ்க், அவர் உள்ளே வந்ததும்
டிவிட்டர் நிறுவனத்தில் பணியில் உள்ள 75 விழுக்காடு ஊழியர்களை நீக்கப்போவதாக தகவல் கசிந்துள்ளது
இந்த அச்சம் தொடர்பாக டிவிட்டர் நிறுவன ஊழியர்கள் எலான் மஸ்க்குக்கு மனம் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்
அதில் ஆட்களை குறைக்கும் நடவடிக்கையால் டிவிட்டர்தான் பாதிக்கப்படும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
கண்ணியத்துடன் தங்களை நடத்த வேண்டும் என்றும், அரசியல் காரணங்களை சொல்லி தங்களை இழிவு படுத்த வேண்டாம்
எனவும் பணியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்
டிவிட்டரை வாங்கிய உடனேயே அதிரடி மாற்றங்களை செய்ய அடுக்கடுக்காக பல திட்டங்களை மஸ்க் வைத்துள்ளார்
கருத்து சுதந்திரம் இதில் பிரதான அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது டிவிட்டரை வாங்கியதும் முதல்வேலையாக பேரை மாற்ற உள்ளதாகவும் விஷயம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர் மேலும் அரசியல் காரணங்களால் முடக்கப்பட்ட முன்னாள் அதிபர் டிரம்ப் உள்ளிட்டோரின் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதில் மஸ்க் தீவிரம் காட்டி வருகிறார் என்கிறார்கள் நிபுணர்கள்.,சீனாவில் உள்ள வீ சாட் நிறுவனத்தை போல அனைத்து தரப்பு தகவல்களையும் ஒரே செயலியில் கொண்டுவர மஸ்க் திட்டம் தீட்டி வருகிறார்