தங்கம் வாங்க போறீங்களா? ஒரு நிமிடம்!!!
அமெரிக்க டாலரின் மதிப்பு எப்போதெல்லாம் வலுவடைகிறதோ,அப்போதெல்லாம் தங்கத்தின் விலை கணிசமாக குறையும்
இதனை மெய்ப்பிக்கும் வகையில் உக்ரைன் போரால் உலகின் பல நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், தங்கத்தின் மதிப்பு
உயர்ந்து வந்தது. தற்போது அமெரிக்க டாலர் வலுவடைந்துள்ளதால் தங்கத்தின் மீதான ஈர்ப்பு குறைந்து வருகிறது.
இதன் காரணமாக தங்கத்தின் விலை விழத் தொடங்கியுள்ளது பங்குச்சந்தைகளில் போட்ட பணம் கடந்த 5 ஆண்டுகளில் 73.2% திரும்ப கிடைத்துள்ளது. அதேபோல தங்கத்தில் செய்த முதலீடுகள் 68.6% திரும்ப கிடைத்துள்ளன
பங்குச்சந்தையில் போட்ட பணத்தைவிடவும் தங்கத்தில் செய்யும் முதலீடு சராசரியாக 5.5% ரிட்டன்ஸ் தருகிறது. இந்தியாவில்
கடந்தாண்டு மட்டும் 797 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது,2017-ல் 771, 2018-ல் 760டன்,2019-ல் 691 டன் , 2020ல் 446 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் 804 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, தங்கத்தை எப்படியும் எளிதாக விற்று பணமாக மாற்றிவிட முடியும் என்பதால் தங்கத்தை வாங்கி குவிப்பதில் இந்தியர்களுக்கு அதீத ஆர்வம் உள்ளது. இந்நிலையில் தங்கத்தை ஆபரணங்களாகவோ, நாணயங்களாகவோ வாங்குவதற்கு பதிலாக அரசு அறிமுகப்படுத்திய சாவரின் கோல்ட் பாண்ட் திட்டத்திலும் அதிகம் பேர் முதலீடு செய்துள்ளனர். எப்படி பார்த்தாலும் தங்கம் தற்போது வாங்குவது உகந்ததாக இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.