எலான் மஸ்க் பராக் …
டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக பல்வேறு
முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இறுதியாக டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைக்கு இன்று அதிகாரபூர்வமாக மாறியது
டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கிய மஸ்க், சுடச்சுட முதல் வேலையாக டிவிட்டரின்
தலைமை பதவியில் இருந்தவர்களை பணியில் இருந்து தூக்கி எரிந்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் டிவிட்டரின் சிஇஓவாக இருந்தார். எலான் மஸ்க் டிவிட்டரை வாங்க முயற்சித்து பின்னர் அது தோல்வியடைந்ததும், நீதிமன்ற படிக்கட்டுகளை முதலில் நாடியது பராக் அகர்வால்
எனவே முதல் வேலையாக பராக் அகர்வால், டிவிட்டரின் சட்டத்துறைக்கு தலைமை வகித்த விஜயா கட்டே உள்ளிட்டோரை மஸ்க் பணி நீக்கம் செய்தார். டிவிட்டர் நிறுவனத்தில் பங்குகள் வாங்கியிருந்தோருக்கு பணம் கொடுத்து செட்டில் செய்யப்பட்டுள்ளது. ஒரு பங்கு 54.20 டாலருக்கு டிவிட்டரின் ஒரு பங்கு வைத்திருந்தவருக்கு பணம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது டிவிட்டர் நிறுவனம் முழுக்க முழுக்க ஒரு தனியார் நிறுவனமாகவே செயல்படுகிறது.
பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள பராக் அகர்வாலுக்கு டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து 42 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
தொகை கிடைக்க உள்ளது. டிவிட்டரை முழுமையாக மஸ்க் கைப்பற்றியுள்ள நிலையில் , முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்களின் கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. டிவிட்டரை வாங்க மஸ்க் கூறிய பிரதான காரணம் டிவிட்டரில் கருத்து சுதந்திரமே இல்லை என்பதுதான். தற்போது அவர் விருப்பம்போல எந்த வகையான விதிகளையும் மாற்றிக்கொள்ளலாம் என்பது சிறப்பம்சமாகும்.