இது எல்லாம் ஒரு மோசடியா?
கடனை பெற்றுவிட்டு திரும்ப செலுத்தாமல் உள்ள செயலை டீபால்ட் என வங்கி வட்டாரங்களில் கூறுவது உண்டு, இந்த நிலையில் 10நாட்களில் கடனை திரும்ப செலுத்த முயற்சிக்கும் நபர்களை மோசடி நபர் என்று கருத வேண்டாம் என்று வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு கேட்டுக் கொண்டுள்ளனர். தற்போதுள்ள நடைமுறைப்படி, குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் அவர்களை என்பிஏ எனப்படும் செயலற்ற நிலையில் வங்கிகள் தரம்பிரிக்கின்றன.
இந்த நிலையில் 90 நாட்களுக்குள் பணத்தை திரும்ப செலுத்தாதபட்சத்தில் அது மோசடியாக கருதப்படுகிறது. பணத்தை திரும்ப செலுத்தாத நிலையில் 30 நாட்களில் அது மோசடி என்ற பிரிவுக்கு சென்று விடுகிறது. இதில் மாற்றம் தேவை என வங்கிகள் சங்கத்தில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கடன் செலுத்த தவறிய 30 நாட்களுக்கு பிறகு கூடுதலாக 10 நாட்கள் அளிக்கவும் புதிய திட்டம் வகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஐசிஏ எனப்படும் இன்டர் கிரிடிட்டார் அக்ரிமெண்டிலும் மாற்றம் தேவை என்றும் வங்கிகள் கூறியுள்ளன. இந்த முறைக்கு ஒரு தரப்பு வங்கிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மற்றொரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எதிர்ப்பு தெரிவிப்போர், தங்களுக்கு பழைய விதியே போதும் என்றும், மோசடி செய்த நபர் கடனை திரும்ப செலுத்த 30 நாட்கள் அவகாசமே போதுமானது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து இந்திய வங்கிகள் சங்கம் இறுதி முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகள் தரும் அவகாசமான 30 நாட்களுக்கு பிறகு ஒரு நாளானாலும் கடனை திரும்ப பெறும் நடவடிக்கையில் வங்கிகள் தற்போது வரை இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. வங்கிகளின் இந்த கோரிக்கையை ரிசர்வ் வங்கி ஏற்குமா என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.