இது எல்லாம் உங்கள் உரிமை!!! தெரிஞ்சுக்கோங்க!!!!
நீங்கள் டிஜிட்டல் முறையில் பணம் கடனாக பெரும்பட்சத்தில் உங்களுக்கு கடன் தரும் நிறுவனம் முதலில் பதிவு செய்யப்பட்ட செயலியாக இருக்க வேண்டும், டிஜிட்டல் முறையில் கடன் வாங்கும்போது எந்தனை ரூபாய் கட்டணம்,சேவைக் கட்டணம் எவ்வளவு,ஓராண்டுக்கு எத்தனை ரூபாய் வட்டி என்பதை கடன் வாங்கும் முன்பே தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நீங்கள் கடன் பெறும்போது மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம், செயலி மூலம் பணத்தை செலுத்துவதை தவிர்த்து ரொக்கமாகவே பணம் செலுத்த வேண்டுமாம். உங்களுக்கு கடன் தொகை அளிக்கத் தயாராக இருக்கும்பட்சத்தில் அதனை போன் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.
இதேபோல் ஒவ்வொரு வங்கியிலும் டிஜிட்டல் முறையில் கடன் அளிக்கப்பட்டாலும் கூலிங் ஆஃப் பீரியட் என்ற அம்சம் இருக்க வேண்டியது அவசியம்.கடன் பெறும்போது அனுமதிக்கப்பட்ட தொகைக்கான வட்டி எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்,கூடுதல் கடன் செலுத்தச் சொல்லி மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. ஒரு வேளை அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்பட்சத்தில் key fact statement-ல் எவ்வளவு தொகை அபராதமாக செலுத்தவேண்டும்
என்பதை சரிபார்ப்பது நல்லது. நீங்கள் டிஜிட்டல் முறையில் கடன் பெறுகீறீர்கள் என்றால் இணைய பாதுகாப்பு மிகமிக முக்கியமானதாக உள்ளது, ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிகளின்படி பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா என்று சரிபார்க்கவும்.