அக்டோபரில் பங்குச்சந்தையின் நிலை என்னவாக இருந்தது?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த சில நாட்களாக நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகிய பங்குகள் கிட்டத்தட்ட 1 % வளர்ச்சியை சந்தித்துள்ளன கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்திய பங்குச்சந்தைகள் 3 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்துள்ளதுடன் முதலீட்டாளர்களின் மதிப்பையும் பெற்றுள்ளது சீனாவில் சில இடங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக அங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாகியுள்ளன. இதன் விளைவாக கச்சா எண்ணெய் இறக்குமதியை சீனா குறைத்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவையும் குறைந்துள்ளது. விலை சரிந்துள்ளதை அடுத்து இதன் பாதிப்பு இந்தியாவுக்கு சாதகமாக மாறியுள்ளது அமெரிக்க பெடரல் ரிசர்வின் அறிவிப்பு இந்திய சந்தைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அனைவரின் பார்வையும் அமெரிக்க அறிவிப்பை எதிர்நோக்கியுள்ளன.
கடந்த 3 காலாண்டுகளில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கான காரணம் குறித்து மத்திய ரிசர்வ் வங்கியின்
கொள்கை குழு கூட்டத்தில் ஆராய உள்ளனர். அமெரிக்க பொருளாதாரம் மெல்ல மீண்டு வருவதால் அதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் பிரதிபலிக்கிறது கடந்த வெள்ளிக்கிழமை ஒருநாளில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆயிரத்து 569 கோடி ரூபாய் பணத்தை இந்திய சந்தைகளுக்குள் கொண்டுவந்துள்ளனர். பல நாடுகளின் சிக்கன நடவடிக்கைகள் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்ற இறக்கும் இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது எனினும் தற்போதைய குறுகிய கால லாபம் தொடரவே அதிக வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.